Tamil Nadu State AIDS Control Society

Frequently Asked Questions


FAQ In English

பால்வினை தொற்று (STI)

பால்வினை தொற்றுள்ளவர்கள் எச்.ஐ.வி தொற்று உடையவருடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டால் எச்.ஐ.வி வரும் வாய்ப்புகள் அதிகம்.
பெண்களுக்கு :- பிறப்புறுப்பில் புண், சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் மற்றும் வலி, அதிகமான வெள்ளைப்படுதல், அடிவயிற்றில் வலி மற்றும் இடுப்பு அரையில் நெறிகட்டுதல். ஆண்களுக்கு :- பிறப்புறுப்பில் புண், சிறுநீர் கழிக்கையில் எரிச்சல் மற்றும் வலி, சிறுநீர் கழிக்கும்போது சீழ் வடிதல், வலியுடன் கூடிய விரைப்பை வீக்கம் மற்றும் இடுப்பு அரையில் நெறிகட்டுதல்.
ஆம். முழுமையாக குணப்படுத்த முடியும்.
ஆம். பால்வினை தொற்றினால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சிகிச்சையை முழுமையாக எடுத்துக் கொண்டால் குழந்தைக்கு பரவாமல் தடுக்கலாம்.மேலும் விவரங்களுக்கு 1800 419 1800 என்றஇலவச தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

ஐ.சி.டி.சி மற்றும் ஏ.ஆர்.டி

எச்.ஐ.வி என்பது ஒருவகை நுண்கிருமி (வைரஸ்) ஆகும். இது மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கிறது.
எச்.ஐ.வி என்பது ஒரு நுண்கிருமி (வைரஸ்). எய்ட்ஸ் என்பது எச்.ஐ.வி நுண்கிருமியினால் ஏற்படும் பல நோய்க்குறிகளின் தொகுப்பு.
அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அமைந்திருக்கும் நம்பிக்கை மையம் சென்று அங்குள்ள ஆலோசகரை அணுகி இரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எச்.ஐ.வி தொற்றிருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் இயங்கும் ஏ.ஆர்.டி (கூட்டு மருந்து சிகிச்சை) மையத்தை அணுகி இலவச தொடர் சிகிச்சையினை பெறலாம்.
ஏ.ஆர்.டி (கூட்டு மருந்து) சிகிச்சையினை எடுத்து கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது மற்றும் வாழ்நாளை கூட்டுகிறது. மேலும் விவரங்களுக்கு 1800 419 1800 என்றஇலவச தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

பெற்றோர் சேய் மேவா திட்டம் (PPTCT)

பெற்றோரிடமிருந்து சேய்க்கு எச்.ஐ.வி பரவுதலை தடுக்கும் திட்டமாகும்.
எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட தம்பதியர் எச்.ஐ.வி தொற்றில்லாத குழந்தையை பெற்றெடுக்க வாய்ப்புள்ளது.
குழந்தை பிறந்து ஆறு வாரத்திலிருந்து ஆறு மாதம் வரை எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய பரிசோதனை உள்ளது.
எச்.ஐ.வியுடன் வாழும் தாய் ஏ.ஆர்.டி (கூட்டு மருந்து சிகிச்சை) எடுப்பதன் மூலம் தாய்பால் வழியாக எச்.ஐ.வி பரவும் வாய்ப்பு குறைவு.

இரத்த பாதுகாப்பு பிரிவு

நல்ல உடல் நலத்துடன் நல்ல பழக்கவழக்கங்களுடைய 18 வயது முதல் 65 வயதுள்ள அனைவரும் இரத்ததானம் செய்யலாம்.
மூன்று மாத இடைவெளியில் (ஆண்டிற்கு 4 முறை) ஒருவர் இரத்ததானம் செய்யலாம்.
மனித உடலில் அதிக அளவில் புதிய இரத்த செல்கள் உற்பத்தியாகும்.
அனைத்து மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இயங்கி வரும் இரத்த வங்கிகளை அணுகலாம்.
மேலும் விவரங்களுக்கு 1800 419 1800 என்றஇலவச தொலைபேசி எண்ணை அழைக்கவும்.

இலக்குப்பணிகள் - ஆணுறை

ஆணுறை தேவையற்ற கர்ப்பம், பால்வினைத் தொற்று மற்றும் எச்.ஐ.வித் தொற்றினை தடுக்கும்.
ரப்பர் அல்லது வழவழப்பு தன்மையூட்டும் பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை தவிர பக்க விளைவுகள் ஏதும் இல்லை.
ஆணுறைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலுள்ள நம்பிக்கை மையம், சுகவாழ்வு மையம், ஏ.ஆர்.டி (கூட்டுமருந்து சிகிச்சைமையம்) தனியார் மருந்தகங்கள் மற்றும் பேரங்காடிகளில் கிடைக்கும்.
ஆணுறை உபயோகிக்கும் முன், அதன் காலாவதி தேதி மற்றும் கிழிந்து இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும்.